சபரிமலை பிரசாதம் வீடு தேடி வரணுமா- அப்போ இதை செய்யுங்க

சபரிமலை பிரசாதம் வீடு தேடி வரணுமா- அப்போ இதை செய்யுங்க

வருடம் தோறும் சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்வார்கள். இந்த முறை கொரோனா காலமாக இருப்பதால் இதுவரை இல்லாத அளவிற்கு சபரிமலைக்கு வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆன்லைனில் முன்பதிவு கொரோனா இல்லை என 24மணி நேரத்துக்குள் அரசு சார்பில் கொடுக்கப்பட்ட சர்ட்டிபிகேட் முக்கியமானவையாக கருதப்படுகிறது இவைகள் இருந்தால்தான் சபரிமலை வர முடியும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பல பக்தர்கள் வர முடியாத சூழ்நிலை இருப்பதால் சபரிமலை கோவில் நிர்வாகம் அனைத்து போஸ்ட் ஆபிஸ்களிலும் சபரிமலை கோவில் பிரசாத பார்சல் அனுப்பும் முறையை கையாண்டு வருகிறது.

அதன்படி உங்கள் ஊரில் உள்ள போஸ்ட் ஆபிஸ்களில் சென்று 450 பணம் செலுத்தினால் வீடு தேடி சபரிமலை பிரசாதம் 3 நாட்களில் வருமாம். உங்கள் ஊர் போஸ்ட் ஆபிஸ்களில் இதை பற்றி கேட்டு அறிந்து கொள்க.