கார்த்திகை 1ம் தேதி பிறந்து விட்டாலே ஐயப்பனுக்கு மாலை அணிந்து ஆத்மார்த்தமாக அங்கு பக்தர்கள் சென்று வருவார்கள். 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசிப்பார்கள் நவம்பரில் ஆரம்பித்து ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு வரும் மகர ஜோதி வரை ஐயப்பன் கோவில் தொடர்ந்து திறந்திருக்கும்.
இந்த வரும் ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக வரும் நவம்பர் 15ம் தேதி கோவில் திறக்கப்படுகிறது.
தினம் தோறும் 30000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரண்டு ஊசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 15 மணி நேரத்திற்குள் எடுத்த பிசிஆர் டெஸ்ட் சான்றிதல் இருந்தால்தான் அனுமதிக்கபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.