தரிசனத்துக்கு பின் கோவில் சபரி மலை கோவில் நடை சாற்றப்பட்டது

29

இந்தியாவில் கேரள மாநிலத்தில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை ஐயப்பன் கோவில். கலியுக வரதனாக காக்கும் கடவுளாக ஐயப்பன் இங்கு வீற்றிருக்கிறார்.

இவரை காண வருடம் தோறும் கார்த்திகை மாதம் மாலையணிந்து எண்ணற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அப்படியாக இந்த வருடம் சபரிமலை கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்தனர்.

வழக்கம்போல அல்லாமல் இந்த வருடம் கொரோனா பிரச்சினைகளால் கடும் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் விதிக்கப்பட்டது.

இதனால் வழக்கமான அளவு கூட்டம் இந்த வருடம் கோவிலில் இல்லை. எப்பொழுதும் மகரஜோதி வரை கோவில் மிக அதிகமான பக்தர்களுடன் பக்தி கோஷத்துடன் பக்தி மணம் கமழும் இடமாக இருக்கும்.

இக்கோவிலில் மகரஜோதி பூஜைகள் முடிந்து கோவில் நடை சாற்றப்படும். பின்பு மீண்டும் அடுத்த ஐயப்ப சீசனில்தான் 3 மாதம் திறக்கப்படும். அதுவரை மாதம் ஆரம்ப தேதிகளில் மட்டுமே திறக்கப்படும்.

மகர ஜோதி தரிசனத்துக்கு பின் நேற்றுடன் ஐயப்பன் சன்னிதி நடை சாற்றப்பட்டது.

பாருங்க:  நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 57 புதிய நோயாளிகள் – 100 ஐ தாண்டியது தமிழ்நாடு!