சபாபதி படத்தின் உரிமத்தை வாங்கிய சன் டிவி

25

சபாபதி என்றொரு திரைப்படம் அந்த காலத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. டி.ஆர் ராமச்சந்திரன் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்த படம் சிறந்த ஒரு நகைச்சுவை படமாகும்.

பழைய  நகைச்சுவை படங்களின் தலைப்பிலேயே நடிகர்  சந்தானம் நடித்து வருகிறார்.

தற்போது சபாபதி என்ற படத்தில் நடித்துள்ளார் சந்தானம்.

இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சபாபதி திரைப்படத்தில் சந்தானம் நடித்திருந்தார். ஆர்.கே.என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கிற இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது.

தந்தை-மகன் புரிதலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படதிற்கு சபாபதி என பெயரிடப்பட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 21-ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் சந்தானத்தின் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார்.

இப்பட உரிமத்தை சன் டிவி கைப்பற்றியுள்ளதாம்.

பாருங்க:  கொரோனா நிவாரணம்…. சன் டிவி கொடுத்தது எவ்வளவு தெரியுமா?
Previous articleபிறந்த நாள் விழாவை விக்ரமுடன் கொண்டாடிய கார்த்திக் சுப்புராஜ்
Next articleஅண்ணா என்னை தெரிகிறதா என கார்த்தியை பார்த்து கேட்ட பெண்