சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக்காகிதம் படம் வெளியானது. இதில் பலிவாங்கும் கொடூர கொலைகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
அவருக்கு உதவி புரிபவராக அவரது அண்ணன் வேடத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். இப்படியொரு கொடூரமான அண்ணன் தங்கச்சி கதாபாத்திரத்தை எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது.
கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். ரொம்ப கொடூரமா ரத்த பலி வாங்குறது போல மோசமான கதாபாத்திரம் என சொல்லி வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தில் பாடலே இல்லாத நிலையில் ரொம்பவும் ராவாக படம் செல்லும் நிலையில் கிழக்கு சீமையிலே படத்தின் தங்கச்சி செண்டி மெண்ட் பாடலான தென் கிழக்கு சீமையிலே பாடலை தனியாக எடிட் செய்து அருண் மாதேஸ்வரனுக்கு யாரோ அனுப்பியதை அவர் செல்வராகவனுக்கு அனுப்ப அவர் மகிழ்ந்து அந்த பாடலை தனது பக்கத்தில் பதிந்துள்ளார்.