5 நாட்களில் ரூ. 350 கோடி வசூல் செய்த சாஹோ திரைப்படம்…

5 நாட்களில் ரூ. 350 கோடி வசூல் செய்த சாஹோ திரைப்படம்…

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையும் தாண்டி வசூலில் சாதனை படைத்து வருகிறது.

Saaho movie collected Rs.350 crore in 5 days – ற்கனவே பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். மாபெரும் வெற்றிபடமான பாகுபலிக்கு பின் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் சாஹோ. இப்படத்தை இயக்குனர் சுஜீத் இயக்கியிருந்தார். இப்படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாக செய்திகள் வெளியானது.

இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா முழுவதும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வெளியானது. ஆனால், இப்படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை என விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், வெளியாகி 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக இன்று காலை முதல் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

மேலும், இப்படத்தின் பின்னனி இசையமைப்பாளர் ஜிப்ரன் சாஹோ திரைப்படம் ரூ. 350 கோடி வசூல் செய்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.