விஸ்வாசம் பார்த்து அழுதேன்…. எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

211

SA Chandrasekar appriciate viswasam movie – நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் இருந்த தந்தை – மகள் செண்டிமெண்ட் காட்சிகள் தன்னை அழ வைத்துவிட்டதாக நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் அஜித்திற்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமா துறைக்கும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில், நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படத்தை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

விஸ்வாசம் படத்தில் இருந்த தந்தை-மகள் செண்டிமெண்ட் காட்சிகள் மறைந்த என் மகள் திவ்யாவை நியாபகப்படுத்திவிட்டது. எனவே, படம் பார்க்கும் போதே அழுதுவிட்டேன். அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படமும் மிகவும் அருமையாக இருந்தது என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

பாருங்க:  தீபாவளிக்கு என்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா?