கோவில்களை விட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அதிக கவனம் செலுத்தவேண்டும் என கூறிய நடிகை ஜோதிகாவுக்கு எஸ் வி சேகர் பதிலளித்துள்ளார்.
கடந்த மாதம் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா மக்கள் கோவில்களைக் காட்டிலும் பள்ளி கல்லூரிகளுக்கு அதிக கவனம் செலுத்தாதது குறித்து பேசியிருந்தார். அவரது பேச்சில் ‘நான் படப்ப்டிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றேன். அந்த கோவில் பெரும் பொருட் செலவில் பராமரிக்கப்படுகிறது. ஆனால் அருகில் இருந்த மருத்துவமனை பராமரிப்பின்றி மோசமாக இருப்பது வருத்தமளிக்கிறது. மக்கள் கோவில்களுக்கு ஏராளமான செலவுகளை செய்வதை காட்டிலும் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு செலவு செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜோதிகாவின் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள நடிகரும் பாஜக வை சேர்ந்தவருமான எஸ் வி சேகர் ‘ஜோதிகா 100% மெச்சூரிட்டி இல்லாமல் பேசுகிறார். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம்.’ எனத் தெரிவித்துள்ளார்.