cinema news
அதுவும் இல்லை இதுவும் இல்லை…அவர் மட்டும்தான் ஹீரோ…கிளம்பிக்கன்னு சொல்லி பஞ்சாயத்தை முடித்து வைத்த எஸ்.வி.சேகர்!…
ஒரு பக்கம் தமிழ் சினிமாவிற்கு இது போதாத காலம் என்று தான் சொல்லவேண்டும் போல. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து இதுவரை பெரிய அளவில் படங்கள் ஏதும் வெளிவரவில்லை. சுசித்ரா பற்ற வைத்த வெடி நாலாபுறமும் வெடித்து சிதற, பாடல் வெற்றியடைவது வரிகளாலா? அல்லது இசையாலா? என்ற மற்றொரு பஞ்சாயத்தும் புற்ப்பட்டது.
பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை சொல்லி வர, இடையில் புகுந்து நான் தான் தீர்ப்பு சொல்லுவேன் என வந்திருக்கிறார் எஸ்.வீ. சேகர். பாடலாசிரியரும் பெரிது கிடையாது, இசையமைளாரும் பெரிது கிடையாது, தாயாரிப்பாளர் மட்டும் தான் இங்கே கதாநாயகன் என சொல்லியிருக்கிறார். தங்களது உழைப்பிற்கான ஊதியத்தை வாங்கிகொண்ட பிறகு படத்தினுடய சாராம்சங்கள் அனைத்திற்கும் சொந்தம் கொண்டாட தகுதி வாய்ந்த நபர் அவர் மட்டுமே என சொல்லிவிட்டார்.
இதே போல தான் தனக்கும் கிரேஸி மோகனுக்கும் பஞ்சாயத்து நடந்தது. நாடகத்தை நடத்தி கொடுத்தற்கான பணம் வழங்கப்பட்டது, ஆகையால் உங்களுக்கும் இந்த படைப்பிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தான் சொல்லியதாக குறிப்பிடிருந்தார். அதே போல ஒரு தச்சரை அழைத்து நாற்காலி செய்ய சொல்லி, அதற்கான கூலியை கொடுத்துவிட்ட பிறகு தச்சர் அந்த நாற்காலிக்கு உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது.
பணம் கொடுத்து அதனை உருவக்க சொன்ன முதலாளிக்கு தான் அதில் உட்காரும், அதில் யாரை அமர வைக்க வேண்டும் என்ற உரிமை இருக்கிறது. அதே போல அந்த நாற்காலியை உடைப்பதும், தீயிட்டு கொளுத்துவதும் அவரின் மனம் எடுக்கும் முடிவு . இதை போல தான் இந்த பாடலாசிரியர், இசையமைப்பாளர் விஷயம். அதில் இது தான் எனது கருத்து என்பதனை தெளிவாக சொல்லியிருக்கிறார் சமீபத்தில்.