cinema news
ரஜினிகாந்த் முதல்வர் ஆவார்.. ஆனால்? – எஸ்.வி.சேகர் பேட்டி
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி முதல்வர் ஆவார் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப் போவதாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார் ரஜினி. ஆனால், ஒன்றை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர் இன்னும் தனது கட்சியின் பெயரை கூட அறிவிக்கவில்லை. தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஆனாலும், அவ்வப்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து அரசியல் தொடர்பான பணிகளை அவர் முடுக்கி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தது. இறுதியாக பொங்கல் பண்டிகையின் போது மதுரையில் மாநாட்டை நடத்தி ரஜினி தனது கட்சி பெயரை அறிவிக்கவுள்ளார் என்கிற செய்தி வெளியாகியது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், பாஜக பிரமுகரமான எஸ்.வி.சேகர் ‘ ரஜின் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அப்போது அவர் நிச்சயம் தமிழகத்தின் முதல்வர் ஆவார். பாஜகவின் தயவு இன்று எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது’ என அவர் தெரிவித்தார்.