Tamil Flash News
தமிழிசை பதவி கொஞ்ச நாள்தான் – கெடு விதித்த எஸ்.வி.சேகர்
ஒரே கட்சியை சேர்ந்த தமிழிசை மற்றும் எஸ்.வி.சேகருக்கும் இடையே மோதல் நாலுக்கு நாள் வலுத்து வருகிறது.
முகநூலில் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை மோசமாக விமர்சித்ததற்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதன்பின் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தன்னை தமிழிசை அனுமதிப்பதில்லை. பாஜக தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு தன்னை அழைப்பதில்லை என எஸ்.வி.சேகர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். ஆனால், இந்த கேள்விக்கு பதிலளிக்காமல் தமிழிசை தவிர்த்துவிட்டார். இதை டிவிட்டரில் ஒருவர் பதிவு செய்திருந்தார். இதற்கு பதில் கூறியுள்ள எஸ்.வி.சேகர் “பரவாயில்லை விடுங்க..இன்னும் கொஞ்ச நாள்தானே’ என கிண்டலாக பதிவிட்டுருந்தார்.
எனவே, தமிழிசையின் பதவிக்காலம் இன்னும் கொஞ்ச நாள்தான். விரைவில் அவர் மாற்றப்படுவார் என்பதைத்தான் எஸ்.வி.சேகர் சூசகமாக தெரிவித்துள்ளார் என்பதை நாம் உணர முடிகிறது.