நேற்று முன் தினம் பீஸ்ட் அப்டேட் ஆக பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.
இந்த பாடலுக்கு அரபிக்குத்து என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பாடல் ப்ரமோ வீடியோவில் நடிகர் விஜய் சில நிமிடங்கள் தொலைபேசியில் பேசி அனிருத், இயக்குனர், நெல்சன், மற்றும் சிவகார்த்திகேயனை கலாய்த்திருந்த வீடியோ வெளியானது.
விஜய் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து இழுத்த இந்த வீடியோ வெளியாகி 24 மணி நேரங்களில் 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.
இந்த அரபிக்குத்து வீடியோவில் விஜய் பேசி இருந்தது வைரல் ஆன நிலையில் அது குறித்து அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் கூறி இருப்பதாவது அவரது பேச்சு எதிர்பார்க்காத ஒன்று என கூறியுள்ளார்.
Unexpected voice from My Son @actorvijay
All the Best to #Beast Team💐@anirudhofficial @Nelsondilpkumar @Siva_Kartikeyan @sunpictures #ArabicKuthu #HalamathiHabibo #BeastFirstSingle #BeastMode #BeastFromApril14 #BeastFromApril #ArabicKuthuOnFeb14 pic.twitter.com/1FlknM2qqG
— S A Chandrasekhar (@Dir_SAC) February 8, 2022