Published
1 year agoon
போர் தொடங்கி ஏழு நாட்கள் ஆன நிலையில் ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனை தொடர்ந்து தாக்கி வரும் ரஷ்யா உக்ரைனின் மற்றொரு நகரமான கார்க்கிவ் நகரில் கடும் தாக்குதலை தொடங்கியுள்ளது.
வீதிகளில் துப்பாக்கி சண்டை நடப்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
கார்க்கிவ் நகரில் உள்ள அரசு அலுவலகங்களை ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது.
உக்ரைனின் மற்றொரு நகரான சுமி நகரத்தின் மீதும் ரஷ்யா கடும் தாக்குதலை தொடுத்துள்ளது.