Latest News
ரஷ்யாவில் பேஸ்புக்குக்கு தடை
பேஸ்புக் என்பது உலக அளவில் எல்லாராலும் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான வலைதளமாகும்.சமூக வலைதளமான பேஸ்புக்கில் இல்லாத கருத்தை எல்லாம் பலர் பரப்பி வருவது இந்தியாவில் மட்டுமல்ல எல்லா நாட்டிலும் நடக்கும் விசயமாகும். வதந்திகளை பரப்புவதே பல முகநூல்வாசிகளின் முழு நேர வேலையாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது ரஷ்யா உக்ரைனை தாக்கி வருகிறது. ரஷ்ய ராணுவம் குறித்த போலியான தகவல்கள் பரவுவதாகவும் ரஷ்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரஷ்யாவில் பல லட்சக்கணக்கான பயனாளர்களின் பேஸ்புக் பக்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.