Latest News
புதினுக்கு எதிராக போராடியவர்கள் அனைவரும் கைது
ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. போரினால் பலர் உயிரிழந்த நிலையில் பலர் அந்த நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இருப்பினும் ரஷ்யா தனது பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ளாமல் தொடர்ந்து போர் புரிந்து வருகிறது.
உயிர்ப்பலிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ரஷ்யாவில் உள்ளவர்களே ரஷ்யாவின் உக்ரைன் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடத்தி வருபவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக தர தரவென்று இழுத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தலைநகர் மாஸ்கோ, புதினின் சொந்த ஊரான புடின்ஸ்பர்க் உள்ளிட்ட ஊர்களில் இதுவரை ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
