ஆர்.ஆர்.ஆர் பட அப்டேட்

51

தெலுங்கு மட்டுமல்லாது அந்த படங்களை தமிழ்ப்படுத்தி வெளியிட்டவர் இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலி. இவரின் படங்கள் எல்லாம் பிரமாண்டத்துக்கு எந்த குறைவும் இல்லாத படமாக இருந்துள்ளது. மாவீரன், நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 என கலக்கிய ராஜமவுலி தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ராஜமவுலி  ராம்சரண் தேஜா இதில் நடித்துள்ளனர்.

சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. கொரோனா  காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின்  படப்பிடிப்பு கடந்த வாரம் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டரை டுவிட்டரில் பகிர்ந்துள்ள படக்குழு,  ஆர்.ஆர்.ஆர் படத்தின் 2 பாடல் காட்சிகளை தவிர்த்து இதர காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் 2 மொழிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகவும், விரைவில் இதர மொழிகளுக்கான டப்பிங்கையும் பேசி முடித்து விடுவார்கள் எனவும் படக்குழு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

பாருங்க:  பொள்ளாச்சி மெஸ்ஸில் காஜல் அகர்வால்
Previous articleபிரசாந்த் வழங்கிய கொரோனா நிவாரண நிதி
Next articleஆர் ஆர் ஆர் சினிமா போஸ்டர் தெலுங்கானா போலீஸ் செய்த வேலை