Connect with us

அதிக எதிர்பார்ப்பில் ஆர் ஆர் ஆர் டிரெய்லர்

Latest News

அதிக எதிர்பார்ப்பில் ஆர் ஆர் ஆர் டிரெய்லர்

இந்தியாவிலேயே மிக பிரமாண்டமாக படம் இயக்குபவர் என்ற பெயரை குறுகிய காலங்களிலேயே பெற்றவர் எஸ்.எஸ் ராஜமவுலி. இசையமைப்பாளர் எஸ்.எஸ் கீரவாணி என்ற மரகதமணியின் சகோதரர் இவர்.

இவரின் மாவீரன், நான் ஈ, பாகுபலி சீரிஸ் படங்கள் எல்லாமே மிக பிரமாண்டமாகவும் வித்தியாசமான முறையில் இருந்ததாலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் சுதந்திர போராட்ட காலத்தை மையமாக வைத்து ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என். டி. ஆர் இருவரையும் நாயகர்களாக வைத்து ஆர்.ஆர். ஆர் படம் இயக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே வந்த படங்களின் வெற்றியால் இப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இயக்குனர் ராஜமவுலிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் 9ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாருங்க:  பூர்ணிமா பாக்யராஜ் பிறந்த நாள் இன்று

More in Latest News

To Top