Entertainment
தன்னை பற்றி கூறிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆலியா பட்
ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் கதாநாயகியாகாக ராம்சரண் தேஜாவின் ஜோடியாக நடித்திருப்பவர் ஆலியா பட்.
இந்த படத்தில் சீத்தா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
ஆனால் அதிக காட்சிகளில் இவர் வரவில்லை. இதனால் தனக்கு முக்கியத்துவம் தரவில்லையென இவர் இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலியை டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்து விட்டதாகவும் மேலும் இவர் ஆர் ஆர் ஆர் படம் பற்றிய செய்திகளை தனது பக்கத்தில் இருந்து நீக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதை ஆலியா பட் முற்றிலும் மறுத்துள்ளார். அப்படி எல்லாம் இல்லை நான் சில நேரங்களில் எல்லாவற்றையும் வைத்துக்கொள்ள மாட்டேன் என்னுடைய பக்கங்கள் சரியாக இருக்க வேண்டும் என ஒழுங்குபடுத்துவேன் . இது போல தவறான வதந்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறியுள்ளார்.
