காலம் ஒரு துரோகி… ‘ராக்கி’ டிரெய்லர் வீடியோ…

199
rocky

வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ராக்கி திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

ராம் இயக்கிய தரமணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வசந்த் ரவி. சில வருட இடைவெளிக்கு பின் அவர் நடித்துள்ள புதிய திரைப்படம் ராக்கி.
இப்படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். பழிவாங்கும் பின்னணியை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. எனவே, ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை இயக்குனர் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  தல 60 முக்கிய அப்டேட் ; அஜித்தின் புதிய லுக் : வைரலாகும் புகைப்படங்கள்