சினிமாக்கள்தான் மக்கள் விரும்பும் மிகப்பெரிய பொழுதுபோக்கு தளமாக உள்ளது. சினிமாவில் ஹீரோக்கள் என்ன செய்தாலும் அதை அப்படியே செய்யும் ரசிகர்கள் உள்ளனர்.
சினிமாவில் செய்வது சில நேரங்களில் விபரீதமான விசயங்களுக்கும் வழி வகுக்கும்.கில்லி படம் வந்த சமயத்தில் அதில் வரும் மிளகாய் பொடி காட்சியினை வைத்து சிலர் திருட முயற்சித்தது.
இது போல திரையில் தேவையற்ற காட்சிகளை வைத்து மக்களை குழப்புகின்ற வேலையையும் சினிமா செய்தது.
இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2வால் அடுத்த களேபரம் இது போல நடந்துள்ளது. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 படத்தின் மூலம் பிரபலமான யாஷ். இப்படத்தில் இவர் ஏற்று நடித்த ராக்கி பாய் கதாபாத்திரத்தின் மூலம் கவனம் ஈர்க்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதை சேர்ந்த சிறுவன் சிகரெட் பாக்கெட்டுகளை ஊதி தள்ள மூச்சு திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது போல காட்சிகளை திரையுலகினர் குறைத்துக்கொள்ளலாமே.