நடிகர் தவசியிடம் ரோஃபோ ஷங்கர் பேசிய பேச்சு

12

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்பன் என்று வசனம் பேசி பிரபலமானவர் நடிகர் தவசி. மதுரை மாவட்டம் தாமரைப்பட்டி என்ற ஊரை சேர்ந்த இவருக்கு கேன்சர் பாதிக்கப்பட்டதால் மிகவும் மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள டாக்டர் சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரைப்பற்றி சமூக வலைதளங்களில் செய்தி பரவியவுடன் பல திரைப்பட நடிகர்கள் நிதியுதவி செய்தனர்.

இந்நிலையில் நடிகர் ரோஃபோ ஷங்கரும் தன்னாலான நிதியுதவியை செய்து நடிகர் தவசியிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு சென்றுள்ளார்.

கருப்பன் குசும்பன் உங்களை காப்பாத்திருவான், அந்த பழைய மீசையோட உங்களை நாங்க பார்க்கணும் மருந்தை விட மனதைரியம்தான் முக்கியம் கவலைப்படாம இருக்கணும் ஐயாம் பேக் அப்டீனு சொல்லுங்க என அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றுள்ளார் ரோஃபோ.

https://twitter.com/imroboshankar/status/1329654191904546816?s=20

பாருங்க:  திருச்சி பிரபல நகைக்கடையில் நகை கொள்ளை - சிசிடிவி கேமராவில் சிக்கிய கொள்ளையர்கள்