காஷ்மீரில் புல்வாமா பகுதியில் தீவிரவாத தாக்குதலில் மரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த இரு ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் ரோபோ சங்கர் நேரில் சென்று நிதியுதவி செய்தார்.
காஷ்மீரில் புல்வாமா பகுதில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 40க்கும் மேற்பட்ட இந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலியான சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மறைவுக்கு நாடு முழுவதும் பலரும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பலரும் உதவிகள் செய்து வருகின்றனர்.
அந்த தாக்குதலில், கோவில்பட்டி சவாலாப்பேரியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இருவரும் பலியாகினர். இவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு உட்பட பலரும் உதவி செய்து வருகின்றன்ர். இந்நிலையில், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்று இருவரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இருவரின் குடும்பத்தினருக்குக்கும் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.