Tamil Flash News
மசாஜ் சென்டரில் பட்டாக்கத்தி காட்டி மிரட்டி கொள்ளை – சென்னைக்கு அருகே பரபரப்பு
சென்னைக்கு அருகே உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் 5 வாலிபர்கள் பட்டாக்கத்தியுடன் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் ஏகாட்டூர் என்ற பகுதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 28 ஆம் தேதி 5 வாலிபர்கள் பட்டபகலில் திடீரென உள்ளே நுழைந்தனர். அதில் ஒருவர் மட்டும் பட்டாக்கத்தி வைத்திருந்தார். அங்கு இருந்த சில பெண்கள் மற்றும் ஒரு ஆணிடம் அவர்கள் மிரட்டி செல்போன் பணம் நகை ஆகியவற்றை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து உடனடியாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து விரைவாக செயற்பட்ட போலிசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்களை கைது செய்தனர். வினோத் என்கிற வாலிபர் மட்டும் தப்பி சென்று விட்டார். அவரை பிடிக்கும் முயற்சியில் கேளம்பாக்கம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் வாலிபர்கள் இப்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அவர்கள் உள்ளே வந்து கொள்ளையடித்துச் செல்லும் அனைத்து காட்சிகளும் பதிவாகியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.