Entertainment
பழனியில் ரோப் கார் சேவை
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. பழனி மலையில் பாலதண்டாயுதபாணியாக முருகன் அருள் பாலிக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை கைவசம் உள்ள தமிழக கோவில்களில் அதிக வருமானம் வரும் கோவில்களில் இந்த கோவில் முதலிடத்தில் உள்ளது.
இங்கு உள்ள 800 படிகளிலும் ஏறி சென்று தரிசனம் செய்ய இயலாதவர்களுக்காக ரோப் கார் வசதி இங்குள்ளது.
கடந்த 50 நாட்களாக பராமரிப்பு பணிககக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கியுள்ளது.