இயக்குனர் பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் பட பர்ஸ்ட் லுக் வெளியானது

121

இயக்குனர் பாலா இயக்கத்தில் நாச்சியார் படம்தான் கடைசியாக வெளியானது. அவர் இயக்கிய வர்மா படம் ட்ராப் செய்யப்பட்டது. இந்த நிலையில் பாலா அடுத்த படம் எப்போது இயக்குவார் என ஆர்வம் பலருக்கும் இருக்கும் நிலை உள்ளது.

இயக்குனர் பாலா தற்போது தனது பி ஸ்டுடியோ சார்பில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.இப்படத்துக்கு விசித்திரன் என பெயரிடப்பட்டுள்ளது.

ஆர்.கே சுரேஷ் வித்தியாசமான வேடத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பத்மகுமார் இயக்க ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். பாலா தனது பி ஸ்டுடியோ சார்பில் நீண்டநாளுக்கு பிறகு தயாரிக்கும் படம் இது.

பாருங்க:  விசித்திரனில் ஆர்.கே சுரேஷ் ஜோடியாக நடிக்கும் பூர்ணா
Previous articleவெற்றிவேலா ஆல்பத்துக்கு சூர்யா பாராட்டு
Next articleசேரனுக்கு நன்றி தெரிவித்த ஸ்னேகன்