விமர்சனத்தில் எல்லை மீறும் தமிழ் டாக்கீஸ் மாறன்

29

அந்தக்காலத்தில் குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்ற ஜனரஞ்சகமான நாளிதழ்களில் வரும் சினிமா விமர்சனங்களே பிரதானமாக இருந்தன. தற்போது உள்ள இணைய உலகில் நிறைய யூ டியூப் சேனல்கள் பெருகி விட்டன.

அதில் எதிர்மறையான விமர்சனங்கள் மூலம் மிக புகழ்பெற்றது தமிழ் டாக்கீஸ் என்ற நிறுவனம். இந்த யூ டியூப் சேனல் நிறுவனத்தில் மாறன் என்பவர் செய்யும் விமர்சனம் புகழ்பெற்றது.

அஜீத் நடித்த விவேகம் படத்தை மோசமாக பேசி இருந்ததால் அஜீத் ரசிகர்களின் எதிர்ப்புக்குள்ளானார்.

படங்களை விமர்சனம் செய்வதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் டைரக்டரை, நடிகரை திட்டும் போக்கை மாறன் தொடர்ந்து கடைபிடிக்கிறார் என அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

ப்ளூ சட்டை மாறன் என அழைக்கப்படும் மாறன் தற்போது வெளியாகியுள்ள மாஸ்டர் படத்தை தலையில்லாத முண்டம் என்றும், பூமி படத்தின் இயக்குனர் லட்சுமணனை மட்டமான முறையில் பயபுள்ள என்று விமர்சித்துள்ளார்.

இது போன்ற இவரது விமர்சனத்துக்கு திரையுலகில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

பாருங்க:  கணவர் செய்த கொடுமை - குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த தாய்