cinema news
நடிகை ரேவதியின் பிறந்த நாள் இன்று
தனது படத்துக்காக முத்துப்பேச்சி கதாபாத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்த்து கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ரேவதியை கண்ட பாரதிராஜா அவரையே மண்வாசனை படத்தின் கதாநாயகியாக்கினார்.
இப்படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ரேவதி, புன்னகை மன்னன், கை கொடுக்கும் கை, அரங்கேற்ற வேளை, மெளனராகம், இதயதாமரை , பூக்களைத்தான் பறிக்காதீர்கள், செல்வி, குங்குமச்சிமிழ் , வைதேகி காத்திருந்தாள்உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நல்ல டான்ஸரான ரேவதி புன்னகை மன்னன் படத்தில் வரும் கவிதை கேளுங்கள், வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் அழகு மலராட பாடலையும் ரேவதியின் சிறந்த நடன திறமைக்கு உதாரணமாக கூறலாம்.
ரேவதியின் க்யூட்டான மற்றும் அமைதியான வெகுளியான நடிப்பை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. 80, 90களில அமைதியான படங்களில் பாந்தமாக நடித்து பெயர் பெற்றவர் ரேவதி.
இவரது கணவர் சுரேஷ் மேனனுடன் சேர்ந்து அவரையே கதாநாயகனாக போட்டு புதிய முகம் என்ற படத்தை தயாரித்தார்.
தற்போது வரைக்கும் உள்ள புதுமுக நடிகர் நடிகைகளுடன் இயல்பாக நடித்து வருகிறார் ரேவதி இன்று நடிகை ரேவதியின் பிறந்த நாள் அவருக்கு நம் இணையதளம் சார்பாக வாழ்த்துக்கள்.