Latest News
மீண்டும் மிரட்டும் ஓமிக்ரான் – விமான நிலையங்களில் கட்டுப்பாடு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மீண்டும் ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் சீனாவின் ஷாங்காய் நகரில் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலை தடுக்க கூடிய முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது.
இது குறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அண்ணா சதுக்கத்திலிருந்து வரும் 8ம்தேதி 389 நடமாடும் மருத்துவ வாகனங்களை முதல்வர் தொடங்கி வைப்பார். மேலும், இரண்டு மூன்று வாரங்களுக்கு பிறகு தடுப்பூசி முகாம்கள் தொடர்வது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும்.வெளிநாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தொடர் கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
