Corona (Covid-19)
இன்று காலை 10 மணி முதல் தொடங்கும் முன்பதிவு – ரயில்வேதுறை அறிவிப்பு!
இந்தியாவில், கொரொனா பரவல் தடுக்க நான்காம் கட்ட ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து வந்தது. அதில் குறிப்பாக, ஏற்கெனவே, இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் முலம் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு சென்றார்கள். இதனையடுத்து, இந்தியன் ரயில்வே இன்னும் சில தினங்களில் சிறப்பு ரயில்களை இயக்க போவதாகவும், அதற்கான அட்டவணையை விரையில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், வரும் ஜீன் 1ஆம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கப்போவதாகவும், ரயில்களுக்கான அட்டவணை குறிப்புகளையும் ரயில்வேத்துறை வெளியிட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் ஆன்லைனில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு வாய்பை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.