பத்திரிக்கையாளர்கள் இனி முன்கள பணியாளர்கள்

15

கொரோனா தொற்று ஏற்பட்ட இந்த பேரிடர் காலத்தில், மருத்துவம் சார்ந்த சேவை புரிவோர், மற்றும் துப்புறவு, சுகாதாரம் சார்ந்த சேவை புரிவோர் அனைவரும் முன்களபணியாளர்களாக கருதப்பட்டனர்.

எல்லாவற்றிலும் முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் முன்கள பணியாளர்கள் வரிசையில் பத்திரிக்கையாளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விரைவில் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் இது குறித்து கூறியபோது,மழை – வெயில் – பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி – ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் – சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும். என ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாருங்க:  உத்தர பிரதேசத்துக்கு 996 கோடி… தமிழகத்துக்கு 510 கோடியா? ஏன் இந்த ஓரவஞ்சனை!
Previous articleநடிகர் சூரி முக ஸ்டாலின் சந்திப்பு
Next articleமனைவி ஐஸ்வர்யாவுக்காக பாடல் பாடிய தனுஷ்