Corona (Covid-19)
கொரோனா மாஸ்க்கை கழற்றும் பிறந்த குழந்தை- உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகும் புதிய புகைப்படம்
உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய வியாதியால் உயிரிழந்தோர் , பாதிக்கப்பட்டோர் பலர். இந்த வியாதியால் உலகத்திற்கே தரித்திரம் பிடித்தது என தாராளமாக சொல்லலாம்.
கடந்த 1 மாதமாகத்தான் கொரோனா பாதிப்புகளில் இருந்து மெல்ல மக்கள் மீண்டு வருகின்றனர். இன்னும் அந்த பாதிப்புகள் குறையாத நிலையில், துபாயை சேர்ந்த ஒரு டாக்டர் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிறந்த ஒரு குழந்தை அழுதுகொண்டே டாக்டரின் மாஸ்க்கை கழட்டுகிறது.இந்த புகைப்படம் ஒரு பாஸிட்டிவ் வைப்ரேஷன் போல இருப்பதாலும் பிறந்த உடனேயே மாஸ்க்கை தூக்கி போடு என சொல்வது போல் உள்ளதால் இந்த புகைப்படம் நேற்று முதல் ட்ரெண்டிங்கில் உள்ளது.