Entertainment
வெற்றிகரமாக ரிலீஸ் ஆனது சிம்புவின் மாநாடு
சிம்பு நடிப்பில் இன்று மாநாடு படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் இது ரிலீஸ் ஆவதற்கு முன் பல சிக்கல்களை எதிர்கொண்டது. படம் பூஜை போட்டதில் இருந்து பிரச்சினைதான் இருந்து வந்தது. ஒரு வழியாக சிம்பு நடிக்க வந்தார். படத்தை சிறப்பாக நடித்து கொடுத்த பின்னும் பட ரிலீஸ் தேதி தீபாவளி என்று அறிவித்து அண்ணாத்தே படத்தால் அந்த தேதியை மாற்றி வைத்து இருந்தனர்.
25ம் தேதி இன்று படம் வெளிவருவதிலும் நிறைய பிரச்சினைகள் இருந்தது. குறிப்பாக தடுப்பூசி போட்டால்தான் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவர் என்ற உத்தரவை மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று திடீரென மாநாடு படம் தள்ளி வைக்கப்படுகிறது என அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு திட்டமிட்டபடி மாநாடு படம் இன்று ரிலீஸ் ஆகும் என அறிவித்தார் அதன் படி படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
