தமிழில் பரத் நடித்த யுவன் யுவதி படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல்.இவர் ஷோபனா, சுகன்யா, பானுப்ப்ரியா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகைகளை போல நாட்டியத்தில் வல்லவர்.
இவர் நாட்டிய பயிற்சிப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மாமாங்கம் என்ற பெயரில் கேரளாவில் அந்த பயிற்சிப்பள்ளி இயங்கி வந்தது. நடிகை, தயாரிப்பாளர், மற்றும் நாட்டியப்பள்ளியையும் இவர் நடத்தி வந்ததால் எந்த வேலையையும் சரிவர கவனிக்க முடியாமல் அவரது நடன பயிற்சியை மூடி உள்ளார்.
இந்த கொரோனா காலக்கட்டம் என்னையும் விட்டு வைக்கவில்லை இந்த நாட்டிய பயிற்சியுடனான நினைவுகள் பசுமையாக உள்ளன என அவர் கூறியுள்ளார்.