red, orange, green districts
red, orange, green districts

தமிழகத்தில் ஹாட்ஸ்பாட்டின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்களின் பட்டியல்களை பார்ப்போம்!

கொரொனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, இதனையடுத்து ஊரடங்கு உத்தரவை மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரொனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 2,526ஆக உயர்ந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 16% நபர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சோதனை எண்ணிக்கை அதிகரிப்பால் கண்டறியப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், எனவே இதை கண்டு பயப்பட வேண்டியதில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரொனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் ஹாட்ஸ்பாட்டின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்களின் பட்டியல்களை பார்ப்போம்! தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், 1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

🟥சிவப்பு நிற மண்டலங்கள்:
1. சென்னை
2. மதுரை
3. நாமக்கல்
4. தஞ்சாவூர்
5. செங்கல்பட்டு
6. திருவள்ளூர்
7. திருப்பூர்
8. ராணிப்பேட்டை
9. விருதுநகர்
10. திருவாரூர்
11. வேலூர்
12.காஞ்சிபுரம்

🟧ஆரஞ்சு நிற மண்டலங்கள்:
1. தேனி
2. தென்காசி
3. நாகப்பட்டினம்
4. திண்டுக்கல்
5. விழுப்புரம்
6. கோவை
7. கடலூர்
8. சேலம்
9. கரூர்
10.தூத்துக்குடி
11. திருச்சிராப்பள்ளி
12. திருப்பத்தூர்
13. கன்னியாகுமரி
14. திருவண்ணாமலை
15. ராமநாதபுரம்
16. திருநெல்வேலி
17. நீலகிரி
18. சிவகங்கை
19. பெரம்பலூர்
20. கள்ளக்குறிச்சி
21. அரியலூர்
22. ஈரோடு
23. புதுக்கோட்டை
24. தருமபுரி

🟩பச்சை நிற மண்டலங்கள்:
1. கிருஷ்ணகிரி