Connect with us

பிகில் பட விழாவை ஏன் புறக்கணித்தார் நயன்தாரா? – காரணம் இதுதான்

nayanthara

Bigg Boss Tamil 3

பிகில் பட விழாவை ஏன் புறக்கணித்தார் நயன்தாரா? – காரணம் இதுதான்

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்ளதது அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் முதல் இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால், படத்தின் நாயகி நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக நயன்தாரா தான் நடிக்கும் படங்கள் தொடர்பான எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை என்கிற கொள்கையை பல வருடங்களாகவே கடை பிடித்து வருகிறார். எனவே, இதனால்தான் அவர் பிகில் விழாவில் கலந்து கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.

More in Bigg Boss Tamil 3

To Top