ஷெரினுடன் ரொமான்ஸ் செய்யும் கவின் – பின்னணி இதுதானா?

224

பிக் பாஸ் வீட்டில் நடிகை ஷெரினுடன் கவின் நெருக்கமாக பழகி வரும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் நடிகை ஷெரினுடன் கவின் நெருக்கமாக பழகி வருகிறார். சில நேரங்களில் அத்து மீறியும் அவரிடம் நடந்துகொள்கிறார். பாத்ரூம் வரைக்கும் அவருடன் செல்கிறார். ஷெரினுடம் கவினை ரசிப்பது போலவே காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. இதையெல்லாம் பொறுமையாக ஓரத்தில் இருந்து லாஸ்லியா பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

Kavin

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற உடனேயே அபிராமி அடுத்து சாக்ஸி அடுத்து லாஸ்லியா என காதல் வலை விரித்த கவினின் பார்வை தற்போது ஷெரின் பக்கம் திரும்பியுள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. வனிதா விஜயகுமார் வெளியேறியபின் நிகழ்ச்சியில் சுவாரசியம் இல்லாமல் போனதால் இந்த டாஸ்க்கை பிக்பாஸ் கவினுக்கு கொடுத்து இருக்கலாம் என சிலர் கூறுகிறார்கள். ஒரு சிலரோ இப்படி செய்தால் லாஸ்லியாவின் பொசசிவ்னஸ் தன் மீது திரும்பும் என கவின் திட்டமிட்டு செய்வதாகவும் கூறுகிறார்கள்.

இன்னும் சிலரோ ஷெரினுடம் இப்படி நடந்து கொண்டால் லாஸ்லியாவுக்கு தன் மீது இருக்கும் காதல் விட்டுப் போய்விடும் என கருதியே கவின் இப்படி நடந்து கொள்வதாகவும் கூறுகிறார்கள். இதற்கும் ஒரு படி மேலே போய், ன்னை விட்டு விலகி இருக்கும் லாஸ்லியாவை வெறுப்பேத்தவே கவின் இப்படி நடந்து கொள்கிறார் எனவும் கூறுகின்றனர். எப்படி போனாலும் கவின் – ஷெரினுக்கு இடையே புதிதாக தொடங்கியுள்ள ரொமான்ஸ் காட்சிகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கியுள்ளது.

பாருங்க:  இடைத்தேர்தலில் அதிக இடங்களை பிடிக்கும் திமுக - ஆட்சி கவிழுமா?