Latest News
மறுதேர்தல் நடத்த அண்ணாமலை கோரிக்கை- நீதிமன்றத்தை நாட முடிவு
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சியான திமுகவே ஜெயித்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை திமுக நடத்திய விதம் மிக மோசமானது வெட்க கேடானது.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை நடந்துள்ளது. எங்களுடைய அனைத்து புகார்களுடனும் குறிப்பிட்ட பூத்களில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட இருக்கிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார்