தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார் – கவ்வெட்டில் அதிமுக அக்கப்போர்!

287
தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார்

நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவராத நிலையில், தேனியில் உள்ள ஒரு கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸின் மகன் ரவீந்திரராந்குமாரின் பெயர் பொறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்வில் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர்.

இந்நிலையில், தேனி தொகுதியில் உள்ள குச்சனூர் காசி அன்னப்பூரணி கோவிலில் கோவிலுக்கு உதவியவர்கள் பெயர் பட்டியலில் ஓபிஎஸ்-ஸின் மகன் ரவீந்திராத்குமாரின் பெயர் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கட்சியினரும், சமூக வலைத்தளங்களிலும் கடுமையாக விமர்சித்து வருகின்ரனர். இதைத் தொடர்ந்து அந்த கல்வெட்டில் ரவீந்திரநாத்குமாரின் பெயர் தற்போது மறைக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  அப்பாவி ஆண்களை ஏமாற்றி 15 திருமணம் - திருச்சியில் ஒரு மோசடி பெண்!