முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஓ.பி.எஸ் மகன்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஓ.பி.எஸ் மகன்…

மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழகத்தில் மொத்தம் 38 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக 37 இடங்களையும் அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஓ.பி.எஸ் மகன் 01

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேனி தொகுதியில் போட்டியிட்டு அவர் மட்டுமே வெற்றி பெற்றார். எனவே, அதிமுக எம்.பி.யாக அவர் ஒருவர் மட்டுமே பாராளுமன்றம் செல்ல இருக்கிறார். இந்நிலையில், அவர் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.