ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தமிழில் ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். பைவ் ஸ்டார், ஆட்டோகிராஃப், ஏழாம் அறிவு,வாலி மின்னலே உள்ளிட்ட படங்களில் இவர் பணிபுரிந்துள்ளார். இதில் ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு மட்டுமே பணி புரிந்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்துக்கு இவர்தான் ஒளிப்பதிவு. இவர் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆனதை கொண்டாடும் வகையில் இவர் புகழ்போற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

