ரவீணா டாண்டனின் புதிய லுக்

ரவீணா டாண்டனின் புதிய லுக்

ஒரு காலத்தில் ஹிந்தி சினிமா உலகின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் ரவீணா டாண்டன். ஹிந்தியில் முன்னணி நடிகையான இவர் ஹிந்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நடிகையாவார்.

தமிழிலும் அர்ஜூன் நடித்த சாது கமல்ஹாசனின் ஆளவந்தான் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ரவீணா டாண்டன்.

சில வருடங்களாக அதிகமான சினிமாக்களில் நடிக்காவிட்டாலும் அவ்வபோது ஏதாவது ஒரு சினிமாக்களில் தலை காட்டி வருகின்றார்.

கடந்த 2018ல் வெளியான திரைப்படம் கேஜிஎஃப். பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு தென்னக மொழிகள் அனைத்திலும் இப்படம் வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாக உள்ளது.

இப்படத்தில் ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரவீணாவின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.