ரத்னவேலுவுக்கு பிறந்த நாள் குவியும் வாழ்த்து

7

பாலா இயக்கிய சேது படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ரத்னவேலு. இந்த படத்தில் இயற்கை எழில் சூழ்ந்த காட்சிகள் என ஒளிப்பதிவாளரின் ரசனைக்கேற்ற காட்சிகள் மிக குறைவுதான். ஒரு வீடு, கல்லூரி, மனநலம் பாதித்தவர்களை அடைத்து வைக்கும் அழுக்கு அறைகள், மனநல விடுதிகள் என தான் பாலா காட்சி வைத்திருப்பார்.

இருப்பினும் இந்த படத்தில் அழுக்கான காட்சிகள்தான் ஏராளம். இருந்தாலும் ரத்னவேலு வைத்த ஷாட்கள் எல்லாம் பேசப்பட்டது. க்ளைமாக்ஸில் தூர போய் விக்ரம் திரும்பி பார்ப்பாரே அதெல்லாம் வேற லெவல் ஷாட்கள். இதை எல்லாம் ஒளிப்பதிவு செய்தது ரத்னவேலுதான்.

பிறகு பாலாவின் நந்தா, ரஜினியின் எந்திரன் என பல படங்களில்  பணிபுரிந்த ரத்னவேலு, இப்போது அகில இந்திய அளவில் உள்ள பல மொழி படங்களில் பிஸியாக இருக்கிறார்.

குறிப்பாக தெலுங்கு படங்களில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

இன்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பாருங்க:  நித்யனந்தாவுக்கு புதிய ஷேஷியை ரெடி - யாருனு தெரியுமா?