கூகுளில் ஏதாவது ஒரு பெயரை அதிகம் ட்ரெண்ட் செய்தாலோ அவர்களை பற்றிய தகவல்களை அதிகம் பார்த்தாலோ கூகுளே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு புகழாரம் சூட்டும் வகையில் தானாகவே ஏதாவது புகழ்பெற்ற வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடும்போது குறிப்பிட்ட பிரபலங்களை காண்பிக்கிறது.
அந்த அடிப்படையில் நேஷனல் கிரஷ் என டைப் செய்தால் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பெயரை கூகுள் காண்பிக்கிறது.
ராஷ்மிகா மந்தனா அதிகமான தெலுங்கு படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்கள் மனம் கவர்ந்தவராக இருக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.