Latest News
அபூர்வமான ஜோதிட ஆன்மிக குறிப்புகள்
நம்முடைய உடலில் மூளையை சூரியபகவான் இயக்குகிறார்.
கண்களை சந்திரபகவான் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
எலும்பு மண்டலம் சனிபகவானின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
நரம்பு மண்டலம் புதன் பகவானின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
ரத்த மண்டலத்தை செவ்வாயும் இருதயத்தை குருபகவானும் பிறப்புறுப்பை ராகு பகவானும் மலதுவாரத்தை கேது பகவானும் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
. திருந்த வேண்டும் மனம் வருந்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு தான் இறைவன் மீண்டும் மனிதப் பிறவியை வழங்கியிருக்கிறார் .இப்போது இருக்கும் துயரத்திலிருந்து மற்றும் சோதனைகளிலிருந்து முழுமையாக மீள வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் தான் அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்ல முடியும்.
ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் சனியும் ராகுவும் சேர்ந்து இருந்தால் அல்லது சனியும் கேதுவும் சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு நாத்திக எண்ணங்கள் உண்டாகும்.
ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மூன்றுவித கர்மவினைகள் உண்டு .பிராரப்த கர்மா, சஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா என்பதே அந்த கர்ம வினைகள் ஆகும்.
நம்முடைய வாழ்நாளில் தொடர்ந்து 40 ஆண்டுகள் ஏதாவது ஒரே ஒரு ஆன்மிகத் தொண்டு செய்துவிட்டால் இந்த மூன்று கர்ம வினைகளில் ஒரே ஒரு கர்மவினை மட்டும் அதிகபட்சம் 5 சதவீதம் குறையும்.
கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவு ஏற்பாடு செய்வது
ஒரு கால பூஜை கூட நடக்காத கோயிலில் ஒரு கால பூஜை நடப்பதற்கு தேவையான பூஜை பொருட்கள் தொடர்ந்து வாங்கி தருவது
ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்களை சட்டப்படி மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பது
கோயிலைப்பற்றிய ஆன்மீக உண்மைகளை எளிமைப்படுத்தி புத்தகமாக வெளியிடுவது அல்லது முகநூல் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு மூலமாக மக்களுக்கு போதிப்பது
ஏழை மற்றும் அனாதை பெண்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் திருமணம் நடத்தி வைப்பது
உழவாரக் குழு ஏற்பாடு செய்து மாதம் ஒரு பழமையான கோயிலுக்குச் சென்று உழவாரப்பணி செய்வது அதற்கான செலவை ஏற்றுக் கொள்வது
விநாயகர் அகவல் ,சிவபுராணம், வராகி மாலை, பைரவர் 108 போற்றி ,பைரவர் 1008 போற்றி ,வாராகி108 போற்றி ,வராஹி 1008 போற்றி போன்ற நூல்களை ஆன்மீக சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் இலவசமாக விநியோகம் செய்வது
ஐந்து வயது முதல் 25 வயது வரை உள்ள குழந்தைகள் இளைஞர்கள் இளம் பெண்களுக்கு நம்முடைய தெருவில் சமயவகுப்பு ஏற்பாடு செய்வது, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை இடைவிடாமல் சமயவகுப்பு நடத்துவது- மிகக் குறுகிய காலத்தில் மிக அதிகமான புண்ணியத்தை தரும்.
கலியுகத்தில் மனிதர்கள் பணம் சம்பாதிக்கவே நேரம் போதாமல் தவிப்பார்கள் என்பது சித்தர்களின் மதிப்பீடு ஆகும்.
எனவே நாம் ஒவ்வொருவரும் அம்மாவாசை அன்று குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
தினமும் அல்லது மாதம் ஒருமுறை இயற்கையான முறையில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
தினமும் அல்லது வாரம் ஒரு முறை உள்ளூரில் உள்ள பழமையான கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
நம்முடைய முன்னோர்களாகிய சித்தர்கள் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது இவைகளை மட்டும் தான்!
இதை தவிர நம்முடைய வருமானம் பார்க்கும் வேலையை நாம் தொடர்ந்து செய்து வரலாம்.
20. தமிழ்நாட்டில் பல குடும்பங்களில் பலர் ஆண்டுக்கு ஒருமுறை கூட தர்ப்பணம் செய்வது கிடையாது. அதனால்தான் பெரும்பாலான குடும்பங்கள் கடன் அல்லது நோய் அல்லது தீராத தொல்லைகளால்
அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
ராகு காலத்தில் நல்ல காரியம் ஆரம்பிக்க கூடாது எமகண்டத்தில் கெட்ட காரியம் செய்ய ஆரம்பிக்க கூடாது என்பது பொது விதியாகும்.
இராகு மகாதிசை நடப்பில் உள்ளவர்களுக்கு ராகு காலத்தில் ஆரம்பிக்கும் காரியங்கள் மகத்தான வெற்றியை தருகின்றன .
அதுதவிர திருவாதிரை நட்சத்திரம் சுவாதி நட்சத்திரம் சதயம் நட்சத்திரம் இந்த மூன்று நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர்களுக்கு வாழ்நாள் முழுதும் ராகுகாலத்தில் ஆரம்பிக்கும் காரியங்கள் வெற்றியைத் தருகின்றன.
ராகு மகா திசையும் ஜென்ம சனியும் சேர்ந்து வந்தால் தாங்கமுடியாத அவமானங்கள் ஒரு ஜாதகரை பாடாய்படுத்தும் .
சந்திர மகா திசையும் ஜென்ம சனியும் சேர்ந்து வந்தால் ஒரு ஜாதகர் தன்னுடைய மன உறுதியை முழுமையாக இழந்து தவிக்க கூடிய சூழ்நிலை வரும்.
சிவராஜயோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
9629439499
ராஜபாளையம்
