Connect with us

ஆச்சரியம் அளிக்கும் அபூர்வமான ஆன்மிக தகவல்கள்

Latest News

ஆச்சரியம் அளிக்கும் அபூர்வமான ஆன்மிக தகவல்கள்

. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனிப்பட்ட குணங்கள் உண்டு .அந்த குணங்கள் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கும்.

வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும் கூட பூமியில் உள்ள மனிதர்கள் மரம், செடி, கொடி, பூமி பகுதி ,கடல் பகுதி, நிலப்பகுதி, மலைப்பகுதி என்று அனைத்து பகுதிகளிலும் கடுமையான தாக்கத்தை உண்டாக்கக்கூடிய நட்சத்திரங்கள் 27 மட்டுமே.

மனிதர்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் இடையே உள்ள தெய்வீக தொடர்பை பற்றி விளக்கம் கலைக்கு ஜோதிடம் என்று பெயர்.

பஞ்சபூதங்கள் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் ஒன்று சேர்ந்து நவக்கிரகங்கள் ஆக உருவாகின.
நவக்கிரகங்களுக்கும் நவகிரகங்களை உருவாக்கிய பஞ்சபூதங்களுக்கும் இடையே உள்ள தெய்வீக தொடர்பை பற்றிய உலகத்தை கூறும் கலைக்கு பஞ்சபட்சி சாஸ்திரம் என்று பெயர்.

பஞ்ச பூதங்களுக்கும் ஒவ்வொரு மனிதருடைய சுவாசத்திற்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றிய விளக்கத்தை கூறும் கலைக்கு சரகலை என்று பெயர்.

இந்த சரக் கலையில் ஒருவர் தேர்ச்சி பெற்று விட்டால் அவருக்கு நவக்கிரகங்களால் எந்தவித பாதிப்பும் நெருங்காது.

ஒவ்வொருவருடைய பிறந்த நட்சத்திரத்திற்கு என்று உரிய பழமையான கோயில் ஒன்று இருக்கிறது.

அந்த கோயிலுக்கு அடிக்கடி அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சென்று வழிபாடு அன்னதானம் அபிஷேகம் செய்து வருவதால் அவர்களுடைய வாழ்க்கையில் வரவேண்டிய கடுமையான கர்மவினைகள் துயரங்கள் சூழல்கள் குறைந்து கொண்டே வரும்.

இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு நட்சத்திரத்திர

பாதத்திற்கும் என்று தனித்தனியாக கோயில்கள் உள்ளன .

அவை இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பிறகு மனிதர்களுக்கு தெரிய வரும்.

பாருங்க:  தஞ்சை கோவிலில் ராஜராஜசோழனின் சதய விழா சிவனுக்கு அபிசேகம் படங்கள்

இவை அனைத்தும் சித்தர்களின் கருணையால் வெளிப்படும்.

நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் சரி எந்த ராசியில் பிறந்து இருந்தாலும் சரி பின்வரும் நட்சத்திரங்கள் ஒன்றில் மாந்தி அல்லது குளிகன் இருக்கும் போது பிறந்திருந்தால் நீங்கள் வாழ்க்கையில் அடிக்கடி மற்றவர்களுடைய மாந்திரீக தாக்குதலால் அவதிப்படுவீர்கள்.

ரோகிணி , அஸ்தம், திருவோணம் இந்த மூன்று நட்சத்திரங்கள் ஒன்றில் மாந்தி இருக்கும் பொழுது பிறந்து இருப்பவர்களுக்கு இந்த தொல்லை இருக்கும்.

ஒருவர் உங்களுக்கு மாந்திரீக தீமை செய்தால் அது உங்களுக்கு ஆயிரத்து எட்டு நாட்கள் வரை பாதிப்பை தரும்.

அவர்கள் செய்யும் மாந்திரீக தீமை நீங்கள் உண்ணும் உணவு வழியாக உங்கள் உடலுக்குள் சென்று விட்டால் அது வாழ்நாள் முழுக்க தீராத துயரங்களை தரும் .

இந்த இழிநிலையை நீக்குவதற்கு சோதிடமும் சித்தமருத்துவமும் அறிந்த அனுபவமுள்ள மற்றும் பொதுநல நோக்கமுள்ள சித்த வைத்தியரை நேரில் சென்று சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

அவர் தரும் மூலிகை மருந்தை முறைப்படி சாப்பிட்டு வந்தால் மட்டுமே உடலுக்குள் இருக்கும் மாந்திரீக கெடுதி உங்களை விட்டு விலகும்.

உங்களில் பலருடைய பிறந்த ஜாதகம் மிகுந்த யோகம் உள்ளதாக இருக்கும்.

அது உங்களுக்கு தெரியும் முன்பாக உங்களிடம் பழகும் சில மந்திரவாதிகளுக்கு தெரிந்துவிடும்.

அதன் மூலமாக உங்களை மூன்று ஆண்டுகள் வரை மாந்திரீக அடிமையாக வைத்திருப்பார்கள்.

அதன் மூலமாக உன்னுடைய பிறந்த ஜாதக யோகத்தை அவர்கள் தங்களுடைய சுயநலத்துக்கு பயன்படுத்துவது வழக்கம்.

இந்த இழிநிலை உங்களை தொடராமல் இருப்பதற்கு நீங்கள் பின்வரும் இரண்டு காரியங்களில் ஏதாவது ஒன்றை மட்டும் செய்து வர வேண்டும்.

பாருங்க:  பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டு வீச்சு

தினமும் ஒரு மணி நேரம் வராகிமாலை என்ற பாடலை ஜெபம் செய்து வர வேண்டும். அவ்வாறு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை வராகி மாலை எவன் செய்து வருவதன் மூலமாக வராகி அன்னையின் அருள் பாதுகாப்பு உங்களுக்கு இப்பிறவி முழுவதும் கிடைக்கும் .இந்த மூன்று ஆண்டுகளும் நீங்கள் கண்டிப்பாக ஒரு முறை கூட அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும் மது அருந்தாமல் இருக்க வேண்டும்.

அல்லது ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சிவராத்திரி அன்று அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும் .

அவ்வாறு மூன்று ஆண்டுகளுக்கு அதாவது 36 தேய்பிறை சிவராத்திரி நாட்களுக்கு அண்ணாமலை கிரிவலம் சென்று வரவேண்டும்.

பெரும்பாலான மந்திரவாதிகள் கடக ராசி அல்லது கன்னி ராசி /கடக லக்னம் அல்லது கன்னி லக்கனம் அல்லது கடக லக்னம் கன்னி ராசி கன்னி லக்னம் கடக ராசி போன்ற அமைப்பில் பிறந்து உள்ளார்கள். சுமார் 95 சதவிகிதம் மந்திரவாதிகள் எந்த ராசி அல்லது லக்கினத்தில் தான் பிறந்து உள்ளார்கள்.

மூலிகைகளில் எவை எல்லாம் நச்சுப்பொருட்களை நீக்குமோ அவை அனைத்தும் நமது உடல் மற்றும் குடியிருக்கும் வீட்டில் உள்ள துஷ்ட சக்திகளை விரட்டும் ஆற்றல் உள்ளவை உதாரணம்:- வெண்கடுகு.

காலை 11 .45 முதல் மதியம் 12. 15 வரை உள்ள நேரத்திற்கு அபிஜித் முகூர்த்தம் என்று பெயர் இந்த நேரத்தில் தினமும் மந்திர ஜபம் செய்வதால் உரிய தெய்வத்தின் அருளாசி வெகுவிரைவில் கிடைக்கும் இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் இறைத் தொண்டுக்காக தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவு செய்யும்.

பாருங்க:  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை கொண்டாடிய இயக்குனர்கள்

சிவராஜ யோக ஜோதிடர்

வீரமுனி சுவாமிகள்
9629439499
ராஜபாளையம்

Continue Reading
You may also like...

More in Latest News

To Top