Connect with us

ரேபிட் டெஸ்ட் சோதனைகள் இப்போது வேண்டாம் !  மாநிலங்களுக்கு மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தல்!

Corona (Covid-19)

ரேபிட் டெஸ்ட் சோதனைகள் இப்போது வேண்டாம் !  மாநிலங்களுக்கு மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கொரொனா பாதிக்க்கப்பட்டவர்களை அறிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை மத்திய, மாநில அரசுகள் பெரிதும் நம்பி வந்தன. இந்தக் கருவிகள் மூலம் விரைவில் கொரொனா முடிவிகள் வந்துவிடும் என்பதால் சீனாவில் இருந்து மத்திய அரசு இறக்குமதி செய்து மாநில அரசுகளுக்கு இறக்குமதி செய்தனர். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில்,ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால், தற்போதைக்கு பரிசோதனை முடிவுகள் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் குஜராத் மாநிலத்திலும் மாறுபட்ட முடிவுகள் வந்துள்ளதால் குழப்பம் விளைந்துள்ளது. ரேபிட் கிட் மூலம் பரிசோதனை மேற்கொண்டால் 6 முதல் 71 சதவீதம் வரை மாறுபட்ட முடிவுகள் ராஜஸ்தான் மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சில மாநில அரசுகளும் இதுபோன்ற முடிவுகளை தெரிவித்துள்ளனர்.

இதனால் புதிதாக வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களை அடுத்து இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் எப்போது பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  ஏப்ரல் 12 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

More in Corona (Covid-19)

To Top