Connect with us

ரங்கா படம் எப்படி உள்ளது

Entertainment

ரங்கா படம் எப்படி உள்ளது

வினோத் டி.எல் இயக்கத்தில்  நேற்று வெளியான திரைப்படம் ரங்கா. இந்த படத்தில் சிபிராஜ், நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த 2017லேயே இந்த படம் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய திரைப்படம் இது இப்போதுதான் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் நேற்று குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை என்ன என்று பார்ப்போம்.

கதாநாயகன் சிபிராஜ் ஒரு விநோத நோயால் அவதிப்படுகிறார்.கதாநாயகனின் வலது கை அவரது மூளையின் உத்தரவில்லாமல் தன்னிச்சையாக செயல்படுகிறது.

வலது கை அவரது சொல்படி செயல்பட வேண்டும் என்றால் அவரது கையில் ஸ்மைலி பால் இருக்க வேண்டும். இல்லேன்னா கை அவரது பேச்சை கேட்காது.

இந்த நிலையில் நிகிலா விமலை திருமணம் செய்து கொள்ளும் சிபிராஜ் மணாலிக்கு தேன் நிலவு செல்கிறார். அவர்கள் தங்கும் ஹோட்டலில் கேமரா வைத்து  பல ஜோடிக்களின் அந்தரங்கத்தை படம்பிடிப்பதை சிபிராஜ் அறிந்து கொள்கிறார்.

இதை அறிந்த வில்லன் குரூப் அவரை துரத்துகிறது. அவர்களிடம் இருந்து கதாநாயகன் கதாநாயகியுடன் எப்படி கரை சேர்ந்தார் என்பதே கதை.

கதை படு சுமார் படமும் சுமார்தான். ஒரு படம் கால தாமதமாக வந்தால் அந்த படம் பெரும்பாலும் தோல்வியைத்தான் தழுவுகிறது. அந்த வகையில் தான் இந்த படமும் சேர்ந்துள்ளது.

பாருங்க:  ஷியாம் சிங்கா ராய் திரைப்படத்துக்கு ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் பாராட்டு

More in Entertainment

To Top