Latest News
இந்தியிலும் க/பெ ரணசிங்கம் ரிலீஸ்
கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது க/பெ ரணசிங்கம் திரைப்படம்.தமிழில் ஓடிடி தளத்தில் ஒரு முன்னணி நடிகரின் படம் முதன் முதலில் வெளியானது என்றால் அது விஜய் சேதுபதி நடித்த இந்த படம்தான். இந்த படத்தை இயக்கி இருப்பவர் விருமாண்டி.
இந்த படம் வெளிநாட்டில் இறந்து போன கணவனின் உடலை மீட்டு கொண்டு வர போராடும் ஒரு பெண்ணை பற்றிய கதை இது.
அரிய நாச்சி என்ற வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்க வெளிநாட்டில் இறந்து போயிருக்கும் கணவனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்தப்படம் பலதரப்பட்ட ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட்டுள்ளது.
இந்த படம் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்துறை போன்ற விசயங்கள் இந்திய அரசு சம்பந்தமாக வருவதால் இப்படத்தை ஹிந்தியிலும் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஹிந்தியில் இப்படத்தை டப் செய்து வெளியிட இருக்கின்றனர்.
இந்த படம் தமிழ் கன்னடம், மலையாளம் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது
