Connect with us

எங்கள் தந்தை பெயரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்- சிவாஜி மகன் ராம்குமார் எச்சரிக்கை

Entertainment

எங்கள் தந்தை பெயரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்- சிவாஜி மகன் ராம்குமார் எச்சரிக்கை

நடிப்பில் சிறந்து விளங்கியவர் சிவாஜி. அதனால் இவர் நடிகர் திலகம் என போற்றப்பட்டார். அவர் மறைந்து பல வருடங்கள் ஆனாலும் நாம் செய்யும் செய்கைகள் பிறருக்கு பிடிக்கவில்லை என்றால் சிவாஜி மாதிரி நடிக்காத என சொல்பவர்கள் உண்டு.

சமீபத்தில் அது போல அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசிய கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசனுக்கு சிவாஜியின் மூத்தமகன் ராம்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜகவை சேர்ந்த இவர், பிரதமர் மோடியை இது போல குறிப்பிட்டு பேசியதற்கே தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.எங்கள் தந்தை சிவாஜி , மோடி இருவருக்கும் ஒற்றுமை உண்டு , இருவருமே தங்கள் சுய உழைப்பால் அடுத்தவரை எதிர்பார்க்காமல் பெரிய உச்சம் தொட்டவர்கள். இடைவிடாத அர்ப்பணிப்புடன் இருந்தவர்கள் உங்களை போல அடுத்தவர் முதுகில் சவாரி செய்தவர் அல்ல , எங்களின் தந்தை உங்கள் மூத்த தலைவர்களுடன் நட்புறவாய் இருந்தவர். தன் உடல் பொருள், புகழ் போன்றவற்றை நாட்டுக்காக அர்ப்பணித்தவர்.

இன்று அவர் இருந்திருந்தால் கண்டிப்பாக பாஜகவைதான் ஆதரித்திருப்பார் அதனால் தேவையில்லாமல் ஒருவரை தரமில்லாமல் விமர்சிப்பதற்கு என் தந்தை பெயரை பயன்படுத்த வேண்டாம் என ராம்குமார் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பாருங்க:  100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர் திறப்பதை கண்டிக்கும் அமெரிக்க பல்கழைக்கழகம்

More in Entertainment

To Top