cinema news
ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தாவூத் இப்ராஹிம் கதை
மும்பை நிழல் உலக தாதா என அழைக்கப்படுபவர் தாவூத் இப்ராஹிம். இவர் மீது இந்தியாவில் சொல்ல முடியாத அளவு எண்ணற்ற கிரிமினல் வழக்குகள், மும்பை குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டவை உள்ளன.
பல வருடங்களாக இந்திய அரசை ஏமாற்றி விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இவரின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி டி கம்பெனி என்ற படத்தை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார். இது போல கதைகளில் எக்ஸ்பர்ட் இவர்.
இப்படம் வரும் மே 15ல் ஸ்பார்க் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது.